1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 4 அக்டோபர் 2021 (19:36 IST)

நாளை முதல் ராமேஸ்வரம் கோவிலில் அனுமதி இல்லை: அதிருப்தியில் பக்தர்கள்!

நாளை மற்றும் நாளை மறுநாள் ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து உள்ளதால் பக்தர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர் 
 
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் வெள்ளி சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் நாளை மறுநாள் மஹாளய அமாவாசையை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது 
 
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து பக்தர்கள் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்வதாகவும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.