1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 மார்ச் 2023 (16:33 IST)

சென்னை மாதிரி ஏற்பாடுகள் இல்லை.. டெல்லி செஸ் போட்டியில் இருந்து விலகிய வீராங்கனை..!

chess
சென்னை மாதிரி ஏற்பாடுகள் இல்லை.. டெல்லி செஸ் போட்டியில் இருந்து விலகிய வீராங்கனை..!
சென்னையில் செஸ் போட்டி நடைபெற்ற போது செய்யப்பட்டிருந்த ஏற்பாடு போல் டெல்லி செஸ் போட்டிக்கு ஏற்பாடு செய்யவில்லை என்றும் அதனால் விலகுகிறேன் என்றும் கஜகஸ்தான் வீராங்கனை தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையில் கடந்த ஆண்டு செஸ் போட்டி நடைபெற்ற போது உலகின் பல நாடுகளில் இருந்து வீரர்கள் வீராங்கனைகள் வந்திருந்தனர் என்பதும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தமிழ்நாடு அரசு செய்து தந்தது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் தற்போது டெல்லியில் மகளிர் செஸ் கிராண்ட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான ஏற்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளதால் டெல்லியில் நடைபெறும் தொடரிலிருந்து விலகுவதாக கஜகஸ்தான் மற்றும் ஜெர்மனி வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர் 
 
கஜகஸ்தான் வீராங்கனை ஜன்சயா அப்துல் மாலிக் மற்றும் ஜெர்மனி வீராங்கனை எலிசபெத் பேட்ஸ் ஆகிய இருவரும் சென்னையின் செஸ் ஒலிம்பிக் போட்டி மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது என்றும் டெல்லியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் ஏமாற்றம் அளிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran