ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜூலை 2019 (13:29 IST)

புது ஆஃபிஸ் தேடனும்... இசக்கி சுப்பையாவோடு கைநழுவிய அமமுக அலுலவகம்!

அமமுகவில் இருந்து விலகி இசக்கி சுப்பையா அதிமுகவில் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமமுக புது அலுவலகத்தை தேட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. 
 
அதிமுக பிளவு, சசிகலா தண்டனை ஆகியவற்றால் புதிதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் துவங்கினார் தினகரன். தேர்தல் சமயத்திலும் அதனை தொடர்ந்தும் அடுத்தடுத்து அவர் எடுத்த நடவடிக்கைகள் அவரது கட்சியினரே அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது உள்ளனர். பலர் கட்சியை விட்டு விலகி வேறு கட்சிகளுக்கு சென்றுவிட்டனர். 
 
டிடிவி தினகரன் மேல் எழுந்த அதிருப்தியால் அவரது வலது மற்றும் இடது கரங்களாக திகழ்ந்த செந்தில் பாலாஜி மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்துள்ளது அமுமுகவின் பெறும் சரிவாக பார்க்கப்படுகிறது. 
தங்க தமிழ்ச்செல்வன் கடந்த வாரம் திமுகவில் இணைந்ததை அடுத்து இப்போது தென் சென்னை தொகுதியில் வேட்பாளராக களமிறங்கிய இசக்கி சுப்பையாவும் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைய இருக்கிறார். 
 
சென்னையில் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான இடத்தில்தான் அமமுக தலைமை அலுவலகம் இயங்கி வந்தது. இப்போது இவர் கட்சியை விட்டு விலகியுள்ளதால் அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் டிடிவி தினகரன்.