1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 3 ஜூலை 2022 (15:19 IST)

ஓபிஎஸ் துணிச்சல் பாராட்டுக்குரியது: டிடிவி தினகரன் திடீர் புகழாரம்!

dinakaran
ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் ஆகியவர்களின் துணிச்சல் பாராட்டுக்குரியது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அதிமுகவில் கடந்த சில வாரங்களாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்பதும், அதிமுக பொதுச் செயலாளர் பதவியை பிடிக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அதிமுகவில் நடைபெறும் குழப்பங்கள் குறித்து கருத்து தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக பொதுகுழுவிற்கு சென்று உண்மையை உடைத்த ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் அவர்களின் துணிச்சல் பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார்
 
அதே நேரத்தில் பணத்துக்கும் பதவிக்கும் அடிமையானவர்கள் தான் ஈபிஎஸ் மக்கள் இருக்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்