1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2023 (12:18 IST)

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஈபிஎஸ்-க்கு தற்காலிக வெற்றி தான்: டிடிவி தினகரன்

dinakaran
அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்றும் அதிமுகவிலிருந்து ஓ பன்னீர் செல்வம் நீக்கப்பட்டது செல்லும் இன்றும் இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி கிடைத்த தற்காலிக வெற்றி என்றும் இரட்டை இலை சின்னம் இருந்தால் மட்டும் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று விடுவார்களா என்றும் கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிச்சாமி இடம் இரட்டை இலை வழங்கப்பட்டாலும் அது இன்னும் பலவீனம் அடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
முன்னதாக அதிமுக பொதுக்குழு செல்லாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இந்த  தீர்ப்பில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். மேலும் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் செல்லும் எனவும் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிமுக பொது குழு கூடியது என்பதும் அந்த பொது குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே. ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறை நீக்கப்பட்டு பொதுச்செயலாளர் என்ற பதவி கொண்டு வருவதாக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லாது என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டது.
 
Edited by Mahendran