திமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்தால் காங். உடன் கூட்டணி: டிடிவி தினகரன்
திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வெளியே வந்தால் காங்கிரஸ் தலைமையிலான புதிய கூட்டணியில் அமமுக சேரும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு நடைபெற்றது. இந்த பொதுக்குழு பேசிய டிடிவி தினகரன் வருகிற 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பயனில்லை என்றும் நம்மால் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க முடியாது என்றும் எனவே தேசிய கட்சிகளில் ஏதாவது ஒன்றுடன்தான் தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியே வந்தால் காங்கிரஸ் கட்சி தலைமையில் அமையும் கூட்டணியில் இணைவோம் என்றும் அவ்வாறு இல்லையெனில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்றும் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.