வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 10 மார்ச் 2021 (15:19 IST)

அமமுக வேட்பாளர் பட்டியலில் டிடிவி தினகரன் பெயர் மிஸ்ஸிங்! தொண்டர்கள் குழப்பம்!

அமமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் டிடிவி தினகரனின் பெயர் இடம்பெறாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் கூட்டணி கட்சிகளையும் அவற்றிற்கான தொகுதிகளை ஒதுக்கும் பணிகளையும் வேக வேகமாக நடத்தி முடித்தது. அந்த வகையில் அமமுக தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 15 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் பின்வருமாறு.

ஆனால் அந்த வேட்பாளர் பட்டியலில் தினகரன் பெயர் இல்லை. இது தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரன் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகியவற்றை வென்று எம் எல் ஏ ஆனார். இந்நிலையில் இந்த தேர்தலில் அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.