டி.டி.வி தினகரன் நிகழ்ச்சியில் களோபரம் - கரூரில் பரபரப்பு (வீடியோ)
டிடிவி தினகரன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட களோபரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியை அடுத்த பள்ளப்பட்டி பகுதியில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, மற்றும் முன்னதாக நலத்திட்ட உதவிகள் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், இப்தார் நோன்பு முடிக்கும் போது செய்தியாளர்களை சந்திப்பதாக கூறினார்.
பின்னர் செய்தியாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க, இப்தார் நோன்பு முடிந்த பிறகு வெளியில் வைத்து பேட்டி தருகின்றேன் என்று சொல்லாமல், செய்தியாளர்கள் பேட்டி, பேட்டி என்று மைக், லோகோ கையுமாக நின்றிருக்க, அதற்கு முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, டி.டி.வி தினகரன் வருகின்றார் என்று அவரது கட்சித்தொண்டர்களை தள்ளிவிட்டதோடு, இஸ்லாமியர்களையும் தள்ளி விட்டனர்.
மேலும், ஆங்காங்கே கட்சித்தொண்டர்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தினர் இடையே தகராறும், தள்ளுமுள்ளும், கூச்சலும் ஏற்பட்டது. இதையெல்லாம் கண்டும், காணாமல் இருந்த டி.டி.வி தினகரன், நேராக ஹாயாக சென்று அவரது வேனில் ஜம் என்று அமர்ந்து பேட்டி கொடுத்தார். பின்பு அதே செய்தியாளர்களிடம், அதற்காகத்தான் நான் வெளியில் வந்து பேட்டி கொடுத்ததாக என்று கூற, ”நீங்கள் உள்ளேயே பேட்டி கொடுத்திருந்தால் இவ்வளவு தள்ளுமுள்ளு ஆகி செய்தியாளர்களின் லோகோ, மைக் டேமேஜ் ஆகி இருக்காது” என்றவுடன் தினகரன் சிரித்த படி சென்றார். இந்த செயலினால், அங்குள்ளவர்களுக்கு பலருக்கு முகம் சுளிப்பு ஏற்பட்டது.