1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 29 ஜூலை 2020 (09:22 IST)

சித்தி (சசிகலா) வரனும்; மகளின் திருமணத்தை தள்ளி போட்ட டிடிவி !!

சசிகலா சிறையில் இருந்து வெளியான பின்பு தான் மகளின் திருமணம் என டிடிவி தினகரன் கறாராக கூறிவிட்டதாக தகவல். 
 
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெய ஹரிணிக்கும், தஞ்சாவூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யான துளசி வாண்டையார் பேரனுமான ராமநாதன் துளசி அய்யாவுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
 
இவர்களது நிச்சய்தார்த்தம் பாண்டிச்சேரியில் உள்ளது தினகரனின் பண்ணை வீட்டில் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த சம்மந்தத்தை சசிகலா சிறையில் இருந்தவாரே முடித்து வைத்துள்ளார். எனவே, சசிகலா வந்த பிறகு தான் திருமணம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
 
இதற்கு மாப்பிள்ளை வீட்டாரும் சம்மதித்துவிட்டதால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு திருமண தேதி குறிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.