வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 20 ஜனவரி 2020 (11:54 IST)

ஹைட்ரோகார்பன் திட்டம்; உத்தரவை திரும்ப பெற வேண்டும்; மத்திய அரசை கண்டிக்கும் டிடிவி

ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மக்களின் கருத்து தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், அதனை டிடிவி தினகரன் கண்டித்துள்ளார்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியோ மக்களின் கடுத்தோ கேட்க தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை குறித்து மத்திய அரசு இவ்வாறு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

மேலும் அப்பக்கத்தில் ”தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட வேளாண் பகுதிகளை இத்திட்டம் சீரழித்துவிடும் ஆபத்து நிறைந்திருக்கிறது. இந்த உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.