செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 20 ஜூன் 2024 (08:49 IST)

மீண்டும் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டாரா திருச்சி சூர்யா? பரபரப்பு அறிக்கை..!

tiruchy surya shiva
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா நீக்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் திருச்சி சூர்யா நீக்கப்பட்டுள்ளார் என்று வெளியாகி இருக்கும் அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாரதிய ஜனதா கட்சியின் சாய் சுரேஷ் குமரேசன் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார் என்றும் ஆகவே கட்சியை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எந்த வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து திருச்சி சூர்யா இந்த அறிக்கையை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு என்ன தலைவரே என அண்ணாமலைக்கு டேக் செய்துள்ளார். இது உண்மையான அறிக்கையா? அல்லது சமூக வலைதளங்களில் வெளியாகும் போலி அறிக்கையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva