1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 28 ஜூலை 2021 (19:41 IST)

பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏன்? திருச்சி சிவா எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு ஏன் என திமுக எம்பி திருச்சி சிவா கேள்விக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்கள் மாநிலங்களில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்
 
கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிக அதிகமாக உயர்ந்து வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிவிட்டது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை தொடும் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்றம் காரணமாகவும் மாநில அரசுகளின் வாட்வரி காரணமாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளதாக திருச்சி சிவா எழுப்பிய கேள்விக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் பூரி மாநிலங்களில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். இந்த பதிலில் அவர் மத்திய அரசின் வரி குறித்து குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது