1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 நவம்பர் 2022 (13:40 IST)

திருச்சியில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் குறைப்பு: சென்னையில் எப்போது?

railway platform
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது திருச்சி ரயில் நிலையத்தில் பிளாட்பார டிக்கெட் மீண்டும் 10 ரூபாய் என குறைக்கப்பட்டுள்ளது
 
பண்டிகை காலங்களில் ரயில் நிலையங்களில் பயணிகள் எளிதாக பயணம் செய்வதற்காக வழியனுப்ப வருவோரின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பிளாட்பார டிக்கெட் விலை பத்து ரூபாயில் இருந்து 20 ரூபாயாக ஒரு சில முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும் உயர்த்தப்பட்டது 
 
இந்த கட்டணம் உயர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திருச்சி ரயில்வே நிலையத்தில் மட்டும் 20 ரூபாய் என உயர்த்தப்பட்ட பிளாட்பார்ம் டிக்கெட் 10 ரூபாய் என குறைக்கப்பட்டது
 
ஜனவரி 31-ஆம் தேதிக்கு பின்னர் தான் சென்னை உள்பட மற்ற நகரங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran