திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி! – கே.என்.நேரு தகவல்!
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில் திருச்சி பெல் தொழிற்சாலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க உள்ளதாக கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனாவால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை எழுந்துள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல திருச்சி பெல் தொழிற்சாலையிலும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், ஒரு மாதத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கும் என்றும் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.