1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (14:21 IST)

துப்பாக்கி சூடு எதிரொலி.. தமிழக கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்..!

transport
துப்பாக்கி சூடு எதிரொலி.. தமிழக கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்..!
கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கி சூடு காரணமாக பாலாறு வழியாக தமிழக கர்நாடகம் செல்லும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பாலாறு வனப்பகுதியில் சிலர் மான் வேட்டையில் ஈடுபட்டதாக தெரிகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டு பரிசல்களில் சென்றவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்
 
இந்த துப்பாக்கி சூட்டில் தமிழகத்தை சேர்ந்த  மீனவர் ராஜா என்பவர் காணாமல் போனதாகவும் அதன் பிறகு அவரது உடல் தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பாலாற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் இரு மாநில எல்லையில் பதட்டம் ஏற்பட்டதை அடுத்து அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக கர்நாடகா எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran