1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 2 மார்ச் 2022 (16:27 IST)

திருநங்கையாக மாறிய மகனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய பெற்றோர்!

விருத்தாசலம் அருகே திருநங்கையாக மாறிய மகனை ஏற்றுக்கொண்ட பெற்றோர் அவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தியுள்ளனர்.

திருநங்கைகளைப் பற்றிய பொது சமுகத்தின் எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு வந்தாலும் அவர்களை குடும்பத்தார் தங்களோடு வைத்துகொள்வதில்லை. அதனால் அவர்கள் சமூகத்தில் இருந்து ஒதுங்கியே வாழ்ந்துவருகின்றனர்.

இந்நிலையில் கடலூரில் திருநங்கையாக மாறிய நிஷாந்த் என்பவரை அவரின் பெற்றோர் மீண்டும் ஏற்றுக்கொண்டுள்ளனர். பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு நிஷா என்று தன் பெயரை மாற்றிக்கொண்ட அவர் சக திருநங்கைகளோடு சேர்ந்து வாழ்ந்துவந்தார். அவரின் பெற்றோரான கொளஞ்சி மற்றும் அமுதா ஆகிய இருவரும் அவரை வீட்டுக்கு அழைத்துவந்து மஞ்சள் நீராட்டு விழாவை உறவினர்களை அழைத்து செய்து வைத்துள்ளனர். இது சம்மந்தமான செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.