வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (10:38 IST)

ஒரே தண்டவாளத்தில் வந்த இரண்டு ரயில்கள்: அரண்டுபோன பயணிகள்

ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்ததால் பயணிகள் அரண்டுபோயினர்.

காட்பாடியில் இருந்து சென்னைக்கு குடிநீர் ஏற்றிச் செல்லும் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரெ அதே ரயில்பாதையில் சென்னையில் இருந்து காட்பாடிக்கு ஒரு பயணிகள் ரயில் வந்துகொண்டிருந்தது. ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் வந்ததால் பயணிகள் மிகவும் அச்சமடைந்தனர்.

ஆனால் டிரைவர்களின் துரித செய்லால், 100 மீட்டர் இடைவெளியிலேயே இரண்டு ரயில்களும் நிறுத்தப்பட்டது. ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் எப்படி வந்தது என தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் ரயில் பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.