செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 14 ஜனவரி 2025 (18:11 IST)

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு: பெரும் சோகம்..!

மதுரை அருகிலுள்ள அவனியாபுரம் என்ற பகுதியில் இன்று ஜல்லிக்கட்டு நடந்த நிலையில், இதில் காளை முட்டியதில் மாடு பிடி வீரர் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போன்ற பகுதிகளில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடைபெறும் நிலையில், தைப்பொங்கலான இன்று உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் 1100 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்ட நிலையில், சிறந்த காளைக்கு டிராக்டர் மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், மதுரை விளாங்குடி என்ற பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் என்ற இளைஞரின் மார்பில் காளை குத்தியதை அடுத்து படுகாயம் அடைந்த அவர், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு பிடி வீரர் ஒருவர் காளை முட்டியதால் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva