திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 17 டிசம்பர் 2016 (16:58 IST)

சலைக்காமல் வழக்குகள் தொடுத்த ‘டிராஃபிக் ராமசாமி’ மருத்துவமனையில் அனுமதி

சமூக ஆர்வலர் 'டிராஃபிக்’ ராமசாமி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 

பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு நீதிமன்றங்களில், பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து வருபவர் சென்னையை சேர்ந்த டிராஃபிக் ராமசாமி. மேலும், இவர் தொடுத்த வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடி வருபவர். இதில், பலமுறை தமிழக அரசுக்கு எதிராக மனு தொடுத்து அதில் வெற்றியும் அடைந்துள்ளார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வழக்கு தொடர்பாக நேற்றும் சென்றிருந்தபோது, 'டிராஃபிக்’ ராமசாமி, நீதிமன்ற வளாகத்திலேயே திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வெங்கடேஷ்வரா மருத்துவமனையில் அவர் அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், பின்னர் சாதரணை சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.