ஒகேனக்கல் செல்ல பொதுமக்களுக்கு தடை: மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
பொங்கல் விடுமுறையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஒகேனக்கல் செல்ல தடை என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு பொங்கல் விடுமுறையில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் தர்மபுரியில் உள்ள சுற்றுலா தலமான ஒகேனக்கலில் ஜனவரி 14ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு தடை விதிக்கப்படுவதாக தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்
இந்த உத்தரவு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது