தமிழ்நாடு உட்பட 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உட்பட மொத்தம் 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதை அடுத்து தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும் அதே போல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாளை முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
நாளை தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுவையில் உள்ள ஒரு தொகுதி உட்பட மற்றும் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாகவும் வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பணிகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நேற்று மாலைடன் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் தேர்தல் நடைபெறும் தொகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் நாளை தமிழகம் முழுவதும் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ள நிலையில் அதிக வெயில் இருக்கும் என்று கூறப்படுவதால் வாக்குப்பதிவு சதவீதம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Siva