புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 2 ஆகஸ்ட் 2023 (15:33 IST)

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்: அதிகாரிகள் அறிவிப்பு..!

நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு பத்திர அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
பொதுவாக ஆடி மாதம் எந்த நல்ல விஷயத்தையும் செய்ய மாட்டார்கள். ஆனால் ஆடி பதினெட்டாம் தேதி திருமணம் உள்ளிட்ட பல நல்ல காரியங்கள் செய்யப்படுவது ஒன்று. 
 
அந்த வகையில் நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு சொத்துக்கள் வாங்குபவர்கள் பத்திரப்பதிவு செய்ய முன்வருவார்கள். இதனை அடுத்து நாளை பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
ஆடிப்பெருக்கை முன்னிட்டு அதிகமான ஆவணங்கள் பதிவு கோரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளைய பதிவுக்காக வழங்கப்படும் தோக்கனங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
Edited by Mahendran