வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 19 ஜனவரி 2022 (10:41 IST)

ரூ.10-க்கு ஒரு கிலோ தக்காளி: வாரிச்செல்லும் மக்கள்!

தற்போது மழை ஓய்ந்து விட்ட நிலையில் மீண்டும் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது, இதனால் விலை குறைந்துள்ளது. 

 
தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்த போது சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்ததால் அதன் விலை அதிகரித்தது. அதிகபட்சமாக கிலோ தக்காளி ரூ.150 வரை விற்பனையாகி வந்த நிலையில் பிறகு மெல்ல விலை குறைந்தது. இந்நிலையில் தற்போது மழை ஓய்ந்து விட்ட நிலையில் மீண்டும் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. 
 
இதனால் மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. தற்போது ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் 1 கிலோ தக்காளி ரூ.10க்கு விற்பனை ஆகிறது. இதேபோல சேலம் மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.15 முதல் 20 வரை விற்பனையாகிறது. மேலும் 3 கிலோ தக்காளி 40 ரூபாய்க்கும் மொத்தமாக விற்கப்படுகிறது.