வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 27 ஏப்ரல் 2016 (05:45 IST)

பணம் பதுக்கலை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு

பணம் பதுக்கலை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
தமிழகத்தில் மே 16 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய தமிழகத்தில் அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் பணம் பட்டுவாடா செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பல்வேறு அதிமுக பிரமுகர்கள் வீடு மற்றும் குடோன்களில் பல கோடி ரூபாய் பறிமுதல் செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், அரசியல் கட்சிகள் பணம் பதுக்கினால், 1800-425-6669 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்புக் கொண்டு பொது மக்கள் தகவல்களைத் தரலாம்  என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.