திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 30 மார்ச் 2021 (06:35 IST)

பிரதமர் இன்று தமிழகம் வருகை: கருப்புக்கொடி, கோபேக் மோடி தயார்!

தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகை தர உள்ளார். இதனை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஒரு பக்கம் பிரதமருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஒரு கூட்டம் தயாராகி வருகிறது 
 
வழக்கம்போல் பிரதமர் தமிழகம் வரும் போதெல்லாம் கருப்புக்கொடி காட்டும் கும்பல், கருப்புக் கொடி காட்ட தயாராகி வருவதாகவும் அதேபோல் இணையதளங்களில் கோபேக்மோடி என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்ய தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று அதிகாலை முதலே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கோபேக்மொடி என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தமிழகத்தில் உள்ள ஒருசில பகுதிகளிலும் புதுவையிலும் பிரதமர் மோடி அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது