திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 29 ஜனவரி 2022 (07:41 IST)

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தும் பெட்ரோல் விலையை உயர்த்தாத மத்திய அரசு

கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வந்த போதிலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருப்பது மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தது
 
ஆனால் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்றும் இதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
உத்திரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிந்தவுடன் இந்தியாவில் மிக அதிகமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் 86வது நாளாக பெட்ரோல் டீசல் விலை சென்னையில் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 என்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என்று விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.