வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

வரலாறு காணாத வகையில் கச்சா எண்ணெய் உயர்வு: ஆனாலும் உயராத பெட்ரோல் விலை!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த காரணத்தினால் வரலாறு காணாத வகையில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளது. ஆனால் இந்திய சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 100 நாட்களுக்கு மேல் உயராமல் உள்ளது. 
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மார்ச் 7ம் தேதியுடன் 5 மாநில தேர்தல் முடிவடைந்துவிடும் என்பதால், மார்ச் 8ஆம் தேதி குறைந்தபட்சம் பத்து ரூபாய்க்கு மேல் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொது மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் 
 
ஐந்து மாநில தேர்தல் முடிவடைந்தவுடன் கணிசமாக பெட்ரோல் டீசல் விலை உயரும் என்றும் அதேபோல் சமையல் எரிவாயு விலையும் கணிசமாக உயரும் என்றும் கூறப்பட்டு வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது.