வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (07:05 IST)

இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் இன்று 6வது நாளாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினசரி பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்ததால் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கியது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைவதை அடுத்து தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்தது. கடந்த 5 நாட்களாக ஒரே விலையில் விற்பனையாகிக் கொண்டிருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்வு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 98.96 என்றும் டீசல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 93.26 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது