திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 14 ஜனவரி 2024 (10:34 IST)

டோக்கன் பெறாத அட்டைதாரர்கள்: பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற இன்றே கடைசி..!

டோக்கன் பெறாத அரிசி அட்டைதாரர்கள்  டோக்கன் பெற்று பொங்கல் பரிசுத்தொகை பெற இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
தமிழகத்தில் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக அரிசி சர்க்கரை மற்றும் கரும்பு ஆகியவற்றோடு ரூபாய் 1000 ரொக்க தொகையும் தரப்பட்டு வருகிறது.  
 
ஜனவரி 9ஆம் தேதி முதல் இவை வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சில அரிசி அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுக்கான டோக்கன் கிடைக்கவில்லை என புகார் அளித்தனர். 
 
இந்த நிலையில் டோக்கன் பெறாத அரிசி அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு பெறுவதற்கு டோக்கன்கள் வழங்கப்பட்டதாகவும் இன்று அவர்களுக்கு பொங்கல் பரிசு பெற கடைசி நாள் என்றும் கூறப்படுகிறது.  
 
ரேஷன் கடை ஊழியர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட இருப்பதால்  இன்று பரிசுத்தொகை கிடைக்காதவர்களுக்கு ஜனவரி 17-ஆம் தேதிக்கு பின்னரே பொங்கல் பரிசு தொகை கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
Edited by Siva