ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (08:45 IST)

19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

rain
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
வங்ககடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது
 
இராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 8 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது/ அதுமட்டுமின்றி தமிழகத்தில் மொத்தம் 19 மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது
 
Edited by Siva