1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 23 ஜனவரி 2017 (16:20 IST)

மாலை 5 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம்: சபாநாயகர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால், ஜல்லிக்கட்டு தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு சிறப்பு கூட்டம் நடைப்பெறும் என தெரிவித்தார்.


 

 
இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைப்பெற்றது. செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் தனபால் கூறியதாவது:-
 
பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்துவது என முடிவு செய்துள்ளோம். சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு கூடும். அதில், ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படும், என்று தெரிவித்தார்.
 
கடந்த 6 நாட்களாக நடந்த போராட்டத்திற்கு வெற்றி இது என்று குறிப்பிடலாம். ஆனால் இதுவும் அவசர சட்டம் தான் என்பது குறிப்பித்தக்கது.