செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (16:28 IST)

குருப்-2 ஏ பதவிகளுக்கு 3-வது கட்ட கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

tnpsc
டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ பதவிகளுக்கு ஏற்கனவே இரண்டு கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட கலந்தாய்வு எப்போது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குரூப் 2 ஏ பதவிகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கு மூன்றாவது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகஸ்ட் 14ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த பணிகளுக்கு முதன்மை தேர்வு கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி நடத்தப்பட்டு ஏப்ரல் நான்காம் தேதி முடிவுகள் வெளியான நிலையில் இரண்டு கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்துவிட்டன.

மீதமுள்ள காலி இடங்களை நிரப்புவதற்கு மூன்றாவது கட்ட கலந்தாய்வு மற்றும் அசல் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்தாய்வுக்கு விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு அழைப்பாணையை இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும் என்றும் இது குறித்த குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva