திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 21 டிசம்பர் 2022 (21:17 IST)

மாண்டஸ் புயலால் ஒத்திவைக்கப்பட்ட TNPSC முக்கிய தேர்வு தேதி அறிவிப்பு!

TNPSC
சமீபத்தில் வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பதும் இதன் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது மட்டுமன்றி முக்கிய தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் தேர்வின் புதிய தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து TNPSC வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் தேர்வு வரும் 27ம் தேதி முற்பகல் (09:30 - 12:30) மற்றும் பிற்பகல் (02:30 - 05:30) என இரு வேளைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran