செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 17 டிசம்பர் 2024 (07:27 IST)

அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து! மறு தேர்வு தேதி அறிவிப்பு வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி..!

tnpsc
டிசம்பர் 14ஆம் தேதி நடந்த அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ள டி.என்.பி.எஸ்.சி புதிய தேர்வுக்கான தேதியையும் அறிவித்துள்ளது.
 
டி.என்.பி.எஸ்.சி மூலம் டிசம்பர் 14ஆம் தேதி இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கறிஞர் பதவிக்கான தேர்வு நடத்தப்பட்டதா நிலையில், இந்த தேர்வில் சில குழப்பங்கள் நடந்ததாக தெரிகிறது. எனவே 15 மாவட்டங்களில் 4186 தேர்வர்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
 
இந்த நிலையில், இந்த பதவிக்கான மறு தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. மறு தேர்வுக்கான நுழைச்சுச்சீட்டு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மட்டும் தனியாக தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
 
இந்த தேர்வு நடத்தப்பட்ட போது சில மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் இந்த தேர்வை முழுமையாக முடிக்க இயலவில்லை என்று தேர்வர்களிடமிருந்து டி.என்.பி.எஸ்.சி ஆணையத்திற்கு கோரிக்கைகள் வந்த நிலையில், இந்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டு முறையாக பரிசீலிக்கப்பட்டு மறு தேர்வு நடத்தப்படுவதாகவும்  டி.என்.பி.எஸ்.சி விளக்கம் அளித்துள்ளது.
 
 
Edited by Siva