திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: ஞாயிறு, 3 ஜூலை 2016 (15:54 IST)

தமிழக காங்கிரஸின் அடுத்த தலைவர் யார்? டெல்லியில் பரபரப்பு

தமிழக காங்கிரஸின் அடுத்த தலைவர் யார்?

தமிழக காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்று விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.
 

 
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் செயல்பட்டு வந்தார். நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டு, காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் மட்டுமே வெற்றிக் கனியை பறிக்க முடிந்தது. பல இடங்களில் படுதோல்வி அடைந்தது. இதற்கு காரணம், 
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் என குற்றம் சாட்டப்பட்டன. மேலும், இளங்கோவன் மீது டெல்லிக்கு புகார் பறந்து சென்றன.
 
இதனால், விசாரணையில் குதித்த காங்கிரஸ் தலைமை ஈவிகேஎஸ் இளங்கோவனை ராஜினாமா செய்ய உத்தரவிட்டது. இதனால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 
இந்த நிலையில், மாநில புதிய தலைவராக, ஹெச். வசந்தகுமார், திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார், தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, ப.சிதம்பரம் மகன் கார்திக் சிதம்பரம் உள்ளிட பலரும் கடும் முயற்சியில் உள்ளனர்.
 
ஆனால், டெல்லியில், தமிழக தலைவரை ராகுல் காந்தி மூலம் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும், அது தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பெயர் வெகுவிரைவில் அறிவிக்கப்பட உள்ளது.