ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (10:34 IST)

அக்டோபர் முதல் தமிழகமெங்கும் ஏசி பேருந்துகள்! – அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதால் மீண்டும் ஏ.சி பேருந்துகள் செயல்பட தொடங்குவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாவட்டங்களுக்கிடையே தமிழக போக்குவரத்து கழக்கத்திற்கு சொந்தமான ஏ.சி பேருந்துகள் செயல்பட்டு வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஏ.சி பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ளதால் அக்டோபர் 1 முதல் தமிழகம் முழுவதும் 702 தமிழக அரசு போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.