திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (11:01 IST)

குப்பை தொட்டி அருகே குடிமகன்கள் நடமாட்டம்! – ட்ரிக்காய் மது விற்ற ஆசாமி கைது!

தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மறைமுகமாக மதுபானங்களை விற்ற ஆசாமி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இன்று முழு ஊரடங்கு பின்பற்றப்பட்டு வரும் நிலையில் அனைத்து கடைகள், டாஸ்மாக் உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள குப்பை தொட்டி அருகே அடிக்கடி சிலரின் நடமாட்டம் தெரிந்துள்ளது. இதனால் அங்கு போலீஸார் சென்று சோதித்ததில் ஆசாமி ஒருவர் குப்பை தொட்டியில் மதுபானங்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. உடனடியாக அந்த நபரை கைது செய்த போலீஸார் அவர் பதுக்கி வைத்திருந்த 63 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.