திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 22 செப்டம்பர் 2021 (19:25 IST)

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றமா? நீக்கப்படும் அமைச்சர்கள் யார் யார்?

தமிழகத்தில் புதிய அரசு அமைந்து ஆறு மாதங்கள் கூட இன்னும் முடிவடையாத நிலையில் அமைச்சரவை மாற்றம் ஏற்படும் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அமைச்சர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட துறைகளைப் பற்றி கவனிக்காமல் தங்களை முன்னிறுத்தி பேட்டிகள் அளித்து வருவதாகவும் ஒரு சிலர் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அந்த அமைச்சர்களின் பதவி பறிபோகும் என்றும் கூறப்படுகிறது 
 
குறிப்பாக கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தலைப்புச் செய்திகளிலும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களிலும் இடம்பெற்றுவரும் முக்கிய அமைச்சர் ஒருவர் மாற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது 
 
அதேபோல் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு அமைச்சர் மாற்றம் இருப்பதாகவும் கூறப்படுகிறது முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் ஹிட் லிஸ்டில் 4 அமைச்சர்கள் இருப்பதாகவும் அவர்கள் நீக்கப்படவும் புதிய அமைச்சர்களாக ஏழு பேர் இணைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது