புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 9 மே 2020 (16:01 IST)

கோர்ட் இதில் தலையிட தேவையில்லை: டாஸ்மாக் விஷயத்தில் காண்டான அரசு!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 
 
நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் நேற்று முன் தினம் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளை தவிர அனைத்து பகுதிகளிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. 
 
இந்நிலையில் மதுக்கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணையில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. ஊரடங்கு விதிமுறைகள் மதுக்கடைகளில் மீறப்படவில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
மேலும், டாஸ்மாக் கடைகளை மூடுவதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டியதில்லை எனவும் தமிழக அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. 
 
ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசு மீண்டும் மேல் முறையீடு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.