திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 நவம்பர் 2023 (14:11 IST)

பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துதல்: தமிழக அரசு ஒப்புதல்

பரந்தூர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த நிர்வாக ஒஒப்புதலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
 
பரந்தூர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு 20 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசாணையும் பிறப்பித்துள்ளது.
 
நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக ரூ.19.24 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மச்சேந்திரநாதன் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த நிலையில் அரசாணை பிரப்பிக்கப்பட்டுள்ளது.
 
பரந்தூரில் விமான நிலையம் அமைய கூடாது என அந்த பகுதி மக்கள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், பரந்தூர் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் விமான நிலைய பணிகளுக்கு நிலம் எடுப்பதற்கான நிர்வாக அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran