1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (11:37 IST)

100 நாள் வேலை திட்டம் இனி 150 நாட்கள்! – தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் 100 நாள் வேலை இனி 150 நாட்களாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் இன்று முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும்.

தற்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 100 நாள் வேலைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.273 வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி இந்த தொகை ரூ.300 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.