திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

இன்று முதல் மதுபானங்கள் விலை ரூ.80 வரை உயர்வு: அதிர்ச்சியில் குடிமகன்கள்!

இன்று முதல் மதுபானங்கள் விலை ரூபாய் 10 முதல் 80 வரை உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது குடிமகன்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழ்நாட்டில் மதுபானங்கள் விலை விரைவில் உயரும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இன்று முதல் மதுபானங்களின் விலை குறைந்த பட்சம் பத்து ரூபாயிலிருந்து அதிகபட்சம் 80 ரூபாய் வரை விலை அதிகரிப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
இந்த விலை உயர்வின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு தினமும் 10.35 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
மதுபானங்கள் விலை உயர்ந்துள்ளது அடுத்து குடிமகன்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.