வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 29 அக்டோபர் 2018 (12:39 IST)

பட்டாசு வெடிக்க இந்த டைமெல்லாம் பத்தாது: தமிழக அரசு மேல்முறையீடு!

தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது குறித்தான உச்சநீதிமன்ற தீர்ப்ப்பிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 
 
சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களில் இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை  மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது. காலம் காலமாக தீபாவளியன்று காலையில் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு பட்டாசு வெடிப்பது தான் மரபு, ஆனால் உச்சநீதிமன்றம் மாலையில் மட்டுமே பட்டாசு வெடிக்கவேண்டும் என அளித்திருக்கும் இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஆகவே தீபாவளியன்று காலையிலும் பட்டாசு வெடிக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.