செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 10 ஜூலை 2020 (20:16 IST)

ஜூலை 13 முதல் ஐடி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி

ஐடி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், தமிழக அரசு அவ்வப்போது ஒரு சில தளர்வுகள் அறிவிப்பு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது மேலும் ஒரு தளர்வாக சென்னையில் 10 சதவீத ஊழியர்களுடன் ஐடி நிறுவனம் இயங்கலாம் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் வரும் 13ம் தேதி முதல் ஐடி நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
கடந்த சில மாதங்களாக ஊரடங்கு காரணமாக தொழில்நுட்ப நிறுவனங்கள் மிகுந்த நஷ்டத்தை பெற்று வருகின்றன. இதனை அடுத்து ஐடி தொழில் நிறுவனங்களை இயங்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் நேற்று 10% ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளித்த தமிழக அரசு தற்போது 50 சதவீதம் ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 90 சதவீதம் பணியாளர்கள் நிர்வாகம் ஏற்பாடு செய்யும் போக்குவரத்து வசதிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது
 
மேலும் முடிந்தவரை அனைத்து பணியாளர்களும் வீட்டிலிருந்து பணிபுரிய ஊக்குவிக்குமாறும், பணியாளர்களை அடிக்கடி கை கழுவுதல் முக கவசம் அணிதல் சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனை அடுத்து வரும் 13ம் தேதி திங்கள் முதல் சென்னையில் காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து ஐடி நிறுவனங்களும் 50% ஊழியர்களுடன் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது