வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2017 (11:27 IST)

டாஸ்மாக்கை மூடிட்டாங்க..நான் என்ன செய்வது? - முதல்வரின் பொறுப்பான பதில்

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய பதில் அவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


 

 
விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும். காவிரி ஆணையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் வெகு நாட்களாக டெல்லியில் போராடி வருகின்றனர். 
 
மத்திய அமைச்சர் 60 நாட்கள் அமைதி காக்கும் படி கூறியதால், கடந்த 2 மாதமாக அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். அந்நிலையில் தற்போது அவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 


 

 
இந்நிலையில், பிரதமரை சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றிருந்த போது, அவரை சந்தித்து, விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தங்கள் கோரிக்கை மனுவை அவரிடம் அளித்தனர்.
 
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை. 10 ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டார்கள். எனவே நிதி இல்லை. போதிய வருமானம் இல்லை. 2 ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நான் என்ன செய்வது? என்று கேட்கிறார். அவரது பதில் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என அய்யாக்கண்னு தெரிவித்துள்ளார்.