வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 4 டிசம்பர் 2018 (08:40 IST)

டீ கடைகளில் முதல்வர் டீ குடிப்பது ஏமாற்றும் நாடகம்: மு.க.ஸ்டாலின்

சமீபத்தில் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் டெல்டா பகுதியில் உள்ள ஒரு ரோட்டோர டீக்கடையில் டீ குடித்தனர். இதுகுறித்த வீடியோ சமூக இணையதளங்களில் வைரலாகியது. கேரளாவை போல் தமிழகத்திலும் எளிமையான முதல்வரை பார்க்க முடிகிறது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் டீ கடைகளில் முதல்வர் டீ குடிப்பது ஊரை ஏமாற்றும் நாடகம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் மந்தமாக நடைபெறுவதை திசை திருப்பவே முதல்வர் டீக்கடையில் டீ குடித்து விளம்பரம் தேடிக்கொண்டதாக திமுக தரப்பு கூறியுள்ளது.

மேலும் திமுக அணியில் எந்த சலசலப்பும் இல்லை என்றும், தேர்தல் நேரத்தில் கூட்டணி வலுப்பெறும் என்றும் கூறிய மு.க.ஸ்டாலின், கருணாநிதி சிலை திறப்பு விழா வரும் 16ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த விழாவில் சோனியா காந்தி மட்டுமின்றி கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் பங்கேற்க உள்ளதாகவும் கூறினார்