காவி கம்பத்தில் தேசிய கொடி: சிக்கலில் பாஜக முருகன்!
தேசிய கொடியை அவமதித்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் முருகன் மீது புகார்.
அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமையகத்தில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி அதற்கு மரியாதை செலுத்தவில்லை என அவர் மீது புகார் எழுந்த நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவர் முருகன் மீதும் புகார் எழுந்துள்ளது.
ஆம், சுதந்திர தினத்தன்று தி.நகரில் உள்ள பாஜக எல்.முருகன் தேசிய கொடியை ஏற்றினார். ஆனால் அவர் பாஜக கொடி கம்பத்தில் தேசிய் கொடியை ஏற்றிவிட்டார். இது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
தேசிய கொடியை அவமதித்துவிட்டதாக சென்னை முகப்பேரை சேர்ந்த ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கொடி ஏற்றும் நிகழ்வில் வானதி ஸ்ரீனிவசாசன், மூத்த தலைவர் இல.கணேசன் உட்பட பலரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.