திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 டிசம்பர் 2021 (11:44 IST)

மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம்! – தலைமை ஆசிரியர் தலைமறைவு!

திருநெல்வேலியில் பள்ளி மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் தலைமை ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரான கிறிஸ்டொபர் ஜெயக்குமார் மாணவிக்கு அடிக்கடி வாட்சப்பில் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார்.

ஒரு கட்டத்திற்கும் மேல் மாணவி இந்த குறுஞ்செய்தி விவகாரம் குறித்து பள்ளி நிர்வாகத்திடமும், பெற்றோரிடமும் தெரிவித்துள்ளார். இதனால் பள்ளி நிர்வாகம் கிறிஸ்டோபர் ஜெயக்குமாரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.