செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 4 மே 2022 (11:03 IST)

ஆம்லேட் போடும் அளவுக்கு வெயில்... அமைச்சர் தரும் டிபிஸ்!

அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்று முதல் தொடங்க இருப்பதை அடுத்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 
ஒவ்வொரு வருடமும் கோடை வெயில் அக்னி நட்சத்திரம் 24 நாட்கள் இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் மே 4 ஆம் தேதியான (இன்று) ஆரம்பிக்கும் அக்னி நட்சத்திர கத்திரி வெயில் வரும் 28 ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் அக்னி நட்சத்திர நாட்களில் வெயில் கடுமையாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மக்களுக்கு சில அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். அவை பின்வருமாறு... 
 
1. வெயில் காலத்தில் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மது அருந்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும். 
 
2. கோடை காலம் முடியும் வரை மக்கள் தண்ணீர் பாட்டிகளுடன் வெளியே செல்லுங்கள்.
 
3.  தாகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கோடைகாலத்தில் போதிய அளவு நீர் குடிக்க வேண்டும்.
 
4. ஆம்லேட் போடும் அளவுக்கு வெயில் உள்ளதால் வாகனங்களின் சீட்டில் துண்டை போட்டு வையுங்கள். 
 
5. பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். எலுமிச்சை உள்ளிட்ட பல சாறுகளை பகிருங்கள்.
 
6.  அவசியம் இல்லாமல் பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். 
 
7. முழு உடலையும் மூடும் வகையில் ஆடைகளை அணிவதன் மூலம் வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்ளுங்கள். 
 
8. காலனி இல்லாமல் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். 
 
9. வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் மீது குழந்தைகளை அமர வைக்க வேண்டாம்.