ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (16:53 IST)

அண்ணாமலை போன்ற பொய் சொல்பவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்கக்கூடாது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அண்ணாமலை போன்ற பொய் சொல்பவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்கக்கூடாது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டியளித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா குறித்து  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய கருத்து கூறிய நிலையில் இந்த கருத்தை இந்து நாளிதழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அண்ணாமலை கூறிய எந்த கருத்தையும் நாங்கள் பதிவிடவில்லை என ஹிந்து நாளிதழ் விளக்கம் அளித்தது.

அதில், 1956 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் அண்ணா தனது கருத்துக்கு மன்னிப்பு மற்றும் மறுப்பு கேட்டதாக நாங்கள் எந்த செய்தியையும் வெளியிடவில்லை என்று விந்து நிறுவனம் விளக்கம் தெரிவித்தது.

இந்த  நிலையில்,அண்ணா பற்றி அண்ணாமலை கூறியதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறியதாவது: ‘’எனது தாத்தா தியாகராஜன் சென்னை மாகாண முதலமைச்சர். அறிஞர் அண்ணா தமிழ் நாட்டின் முதலமைச்சர். பசும்பொன் முத்துராமலிங்கனார் சிறந்த இயக்கவாதி. இவர்களுக்குள் இருந்த நல்ல உறவை அவர்கள் வாழ்ந்த காலத்தில் பிறக்காத அண்ணாமலை சொல்லும் அவதூறு பொய்களை பொய் என நிரூபிக்க பலர் உண்மையை எடுத்துக்கூறி வருகின்றனர். அண்ணாமலை போன்ற பொய் சொல்பவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்கக்கூடாது. பொய்யான கருத்துகள் ஜன நாயகத்திற்குக் கேடு ‘’என்று தெரிவித்துள்ளார்.